கொரோனாவிலிருந்து குணமானார் சூர்யா!

actor quarantine wishes
By Jon Feb 11, 2021 02:18 PM GMT
Report

கொரோனா பாதிப்பில் இருந்த சூர்யா தற்போது குணமாகியுள்ளதாக அவரது சகோதரர் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்திக் தனது ட்வீட்டர் பதிவில் அண்ணன் சூர்யா வீடு திரும்பியிருப்பதாக அவரது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா தனது ட்வீட்டர் பதிவில் கொரோனா இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

தற்போது கார்த்திக் ட்வீட்டர் பதிவின் மூலம் சூர்யா குணமாகியுள்ளதாக தெரிய வருகிறது , இதனால்தான், சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார் ஆனாலும் இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவிறுத்தியிருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.