காளைக்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் சூர்யா போட்டோ.. குஷியான ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா வரும் ஜூலை 23-ஆம் தேதி தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகி இருந்தது. காளைக்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் விதமாக காளை முத்திரையுடன் டைட்டில் லுக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், கூட்டமாக திரண்டிருக்கும் மனிதர்கள் கைகளில் கயிற்றுடன் நிற்க அடக்கமுடியாத காளையாக சூர்யா கயிற்றை திமிறிக்கொண்டு செல்லும் வகையில் மிரட்டலான காமன் டிபியை வெளியிட்டு சூர்யா ரசிகர்கள் சிறப்பித்துள்ளனர்.
இதனை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ராஜசேகரன், ஸ்டூடியோகிரின் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் இந்தக் காமன் டிபியை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.