கிரிக்கெட்டில் கால்பதிக்கும் சூர்யா - சென்னை அணியை வாங்கினார்..!!

Suriya Ram Charan Hrithik Roshan Amitabh Bachchan
By Karthick Dec 27, 2023 09:43 AM GMT
Report

ISPL T10 தொடரில் சென்னை அணியின் உரிமையை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

ISPL T10

இந்தியாவில் அடுத்த வருடம் ISPL(Indian Street Premier League) அதாவது 10 ஓவர்களை கொண்ட T 10 தொடர் துவங்கப்படவுள்ளது. மார்ச் 2-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்த தொடரில் சென்னை, ஹைதராபாத், மும்பை, ஸ்ரீநகர் மற்றும் பெங்களூர் என 5 அணிகள் பங்குபெறுகின்றன.

suriya-bags-ispl-t10league-chennai-rights-official

இதில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், ஹைதராபாத் அணியை ராம் சாரணும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியை ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரும் வாங்கியுள்ளார்.

சூர்யா

இந்நிலையில், சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இந்த தொடரில் 16 பேர் அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள் ரெஜிஸ்திரேட்டின் தற்போது நடைபெற்று வரும் சூழலில், உரிமத்தை வாங்கியுள்ளதை சூர்யா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

suriya-bags-ispl-t10league-chennai-rights-official

இந்தியன் ஸ்ரீட் பிரீமியர் லீக் தலைவராக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.