வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டே இருப்பேன் - நடிகர் சூர்யா

Movie Actor Suriya Jyothika Jai Bhim
By Thahir Oct 31, 2021 07:47 AM GMT
Report

‘ஜெய் பீம்’ நம் மக்களின் கதை. ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு சொன்ன ஒரு நீதிபதியின் கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சிந்தனையை தூண்டும் கதைக்களம் கொண்டது. த.செ.ஞானவேல் டைரக்டு செய்து இருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா நானும், ஜோதிகாவும் சேர்ந்து தான் கதையை கேட்போம்.எங்கள் 2டி கம்பெனியில் நாங்கள் இருவரும் பங்குதாரர்கள் என கூறினார்.

மேலும் செய்தியாளர்கள் இன்னும் 30 அல்லது 40 வருடங்கள் கழித்து நடிகராக மட்டும் இருப்பீர்களா அல்லது டைரக்டராகி விடுவீர்களா? என கேள்வி எழுப்பினர்

அதற்கு பதில் அளித்த அவர் ,ஹாலிவுட்டில், 92 வயதான கிளைண்ட் ஈஸ்ட்வுட் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரைப்போல் வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் அதிக உழைப்பை கொடுத்து நடித்த படம் ‘மாற்றான்.’ கழுத்துக்கு மேலே நானும், கீழே இன்னொருவருமாக ஒட்டிப்பிறந்தவர்களாக நடித்தோம்.அந்த படத்துக்காக என்னுடன் டைரக்டர் கே.வி.ஆனந்தும் கடுமையாக உழைத்தார் என்றார்.

தீபாவளியை எனது கூட்டு குடும்பத்தினருடன் கொண்டாட உள்ளோம் எங்க வீட்டில் மொத்தம் 13 பேர் இருக்கிறோம் என தெரிவித்தார்.