பாலாவுடன் மோதலா?..‘சூர்யா 41’ படப்பிடிப்பு என்ன ஆனது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Suriya
By Swetha Subash May 04, 2022 07:28 AM GMT
Report

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நடித்த சூர்யா தற்போது 3-வது முறையாக பாலாவுடன் இணைந்து சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

பாலாவுடன் மோதலா?..‘சூர்யா 41’ படப்பிடிப்பு என்ன ஆனது? - படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Suriya 41 First Level Shooting Ended Says Crew

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூரப்படுகிறது.

சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதமாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கோபமடைந்த நடிகர் சூர்யா படப்பிடிப்பின் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்பட்ட தகவல் ரசிகரகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததிருப்பதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.