உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
Suriya
By Nandhini
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சூர்யா ரசிகர் மன்ற செயலாளராக இருந்தவர்தான் ஜெகதீஷ். இவர் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜெகதீஷ் மறைவை அறிந்த நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் அவரது குழந்தைகளுக்கும், அவர் ஆறுதல் கூறினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ரசிகர் மன்றத்தின் செயலாளர் இறந்த சம்பவம் கேட்டு அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் மனிதாபிமானத்திற்கு சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.