இப்படியுமா கேப்பீங்க..புது டெக்னீக்கா இருக்கே..அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்த மருத்துவமனை

அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

அமெரிக்காவில்  ஒரு பெண் அறுவை சிகிச்சைக்கு முன் உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் அழுதுள்ளார்.

இதனால், மருத்துவமனை அந்த பெண்ணுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது. மிட்ஜ் என்ற பெண் மருவை அகற்ற மருத்துவமனைக்கு சென்றார்.

சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற மருத்துவர்கள் தயாராக இருந்தபோது அந்த நேரத்தில் மிட்ஜ் பயத்தில் அழுதுள்ளார்.

பின்னர், அவருக்கு ஆறுதல் கூறி மருவை அகற்றினர். டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் அந்த பெண்ணிடம் பில் கொடுக்கப்பட்டது.

அதில், மொத்தம் 223 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில் 11 டாலர் அவள் அழுததற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதில், இரண்டு டாலர் தள்ளுபடி வழங்கியதாகவும், அந்த பில் "ப்ரீஃப் எமோஷன்" என்ற பெயரில் வசூலிக்கப்படுவதாகக் இருந்தது. அதைப் பார்த்த மிட்ஜ் அதிர்ச்சியடைந்தார்.

முதன்முறையாக இதேபோன்ற பில்லை பார்த்ததாகவும், நான் இதை உலகிற்கு சொல்ல விரும்பினேன் என கூறி அந்த பில்லை தனது ட்விட்டர் கணக்கில் அப்பெண் வெளியிட்டார்.

இந்த பில்லை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களில் அவரது பதிவு வைரலானது. பத்து மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் இருந்தன.

எட்டாயிரம் ரீட்வீட்கள் செய்யப்பட்டன. இது அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நிலை என்று சிலர் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்