முள் குத்தி உயிருக்குப் போராடிய பாம்பு - அறுவை சிகிச்சைக்கு பின் காப்பாற்றிய மருத்துவர்கள்..!

Coimbatore Snake
By Thahir Jul 26, 2023 10:50 AM GMT
Report

கோவையில் மீன் துாண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய சாரை பாம்பை கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.

உயிருக்கு போராடிய பாம்பு 

கோவையில் சாரை பாம்பு ஒன்று மீன் பிடிக்கச் சென்ற ஒருவரின் துாண்டில் முள் குத்தி பலத்த காயமடைந்துள்ளது. இதனால் பாம்பு இயல்பான வேகத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டது.

Surgery for a snake that was fighting for its life

இதனைப் பார்த்த குறிச்சி பொதுமக்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் பலத்த காயம் அடைந்த பாம்புவை பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு வந்து சாரை பாம்பை பிடித்து கோவையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள் 

பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு பாம்பின் உடலில் குத்தி இருந்த துாண்டில் முள்ளை அகற்றினர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு பிறகு சாரை பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Surgery for a snake that was fighting for its life

உயிருக்கு போராடிய பாம்பை மீட்டு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள், பாம்பு பிடி வீரர் மற்றும் பொதுமக்களை உயிரியல் ஆர்வலர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.