முகத்தில் பெரிய அறுவை சிகிச்சை - விஜய் ஆண்டனியே சொன்ன தகவல்!

Vijay Antony Chennai Accident
By Sumathi Jan 26, 2023 08:36 AM GMT
Report

நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக அறியப்படுபவர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி

இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது, அவர் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார்.

முகத்தில் பெரிய அறுவை சிகிச்சை - விஜய் ஆண்டனியே சொன்ன தகவல்! | Surgery Completed Says Vijay Antony

இந்த படத்துக்காக லங்காவி தீவில் பாடல் காட்சி கடந்த சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அப்பொழுது, ஏற்பட்ட விபத்தில் அவர் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. மலேசியாவில் ஆரம்பக்கட்ட சிகிச்சை பெற்ற அவர், பின்னர் சென்னை திரும்பினார். பின், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை

இந்நிலையில், தன் உடல்நலம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவில், அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பலத்த தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் பத்திரமாக மீட்கப்பட்டேன்.

நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்தேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன், எனது உடல்நிலையில் உங்கள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி. என அவர் பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.