தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடிய சுரேஷ் ரெய்னா... - வைரலாகும் வீடியோ..!
சுரேஷ் ரெய்னா தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுரேஷ் ரெய்னா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் சின்ன தல என்று அன்போடு அழைக்கின்றனர். சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
சுரேஷ் ரெய்னா பழைய பார்மில் இல்லை என்று கூறி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் அக்டிவ்வாக இருந்து வருகிறார் சுரேஷ் ரெய்னா, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிட்டு வருவதால், அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுக்கிறது.
வீடியோ வெளியிட்ட சுரேஷ் ரெய்னா
இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், என் குட்டி தனது அழகான சிறிய ஸ்ட்ரோக்கில் வேலை செய்ய முயற்சிக்கிறான். என் இதயம் மிகவும் நிறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள், ரெய்னா போல அவரது மகன் இடது கை பேட்ஸ்மேன் இல்லை, வலது கையில் தான் பேட்டிங் செய்கிறார். குட்டி ரெய்னா தயாராகி வருகிறார் என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ ஒரே நாளில் 28 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த வீடியோ பதிவிற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை அள்ளி தெறித்துள்ளனர்.