மடியில் தன் குழந்தையுடன் ஆனந்த விழா கொண்டாடிய சுரேஷ் ரெய்னா - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

cricket player suresh-raina சுரேஷ் ரெய்னா வைரலாகும்புகைப்படம் viral-twitter happy-festival
By Nandhini Apr 16, 2022 10:43 AM GMT
Report

Mr. IPL' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சுமார் 10 சீசன்களுக்கு மேல் சென்னை அணிக்காக ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் நிறைய சாதனைகளை படைத்துள்ள ரெய்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதனையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில், ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

சமீபத்தில் தோனியின் அரை சதம் குறித்து ரெய்னா தனது டுவிட்டர் பதிவில், "தோனி 50 ரன்கள் விளாசியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது எனவும் இந்த சீசனில் மாஹியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ள ரெய்னா தனது -commentary எப்படி இருந்தது என பதிவிட்டிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கினர்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், தன் குழந்தையுடன் இல்ல விழா புகைப்படத்தை பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இறுதியாக ரியோ 2 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு முந்தன் சன்ஸ்கார் பெற்றார். முழு குடும்பத்தின் முன்னிலையில் ஹவன் மற்றும் மந்திரங்களுடன் என்ன ஒரு ஆனந்தமான விழா’ என்று பதிவிட்டுள்ளார். 

தற்போது சமூகவலைத்தளத்தில் இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.