வேட்டியில் கலக்கும் "சின்ன தல ரெய்னா"... வைரலாகும் வீடியோ...

Suresh Raina Csk
By Petchi Avudaiappan Jun 01, 2021 12:27 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ரசிகர்களால் சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அவ்வாறு ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெய்னா பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் வேட்டியுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த பதிவில் சில பழைய படப்பிடிப்பு நாட்கள் நினைவில் வருகின்றன. சீக்கிரம் செட்டுக்கு திரும்புவேன் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் மாஸ்டர் படத்தின் இசை யும் உபயோகிக்கப் பட்டுள்ளது. 

இந்த வீடியோ பழைய வீடியோ என்றாலும் ரெய்னா தற்போது பதிவிட்டது வைரலாக மாறியுள்ளது.