தோனியின் முடிவால் கதறி அழுத சுரேஷ் ரெய்னா - என்ன காரணம் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எடுத்த ஒரு முடிவால் சக வீரர் சுரேஷ் ரெய்னா தேம்பிதேம்பி அழுதார் என்று பிரபல வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் தான் அவர் இந்த முடிவை எடுத்தார்.
இதனிடையே அந்த நாளில் என்ன நடந்தது என இந்திய அணியின் இளம் வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். அதாவது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி எங்களிடம் தோனி ஓய்வு அறிவித்துவிட்டார் என தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் சக வீரரும், தோனியின் நண்பருமான சுரேஷ் ரெய்னா தேம்பி அழத் தொடங்கினார். மேலும் என்னை சுற்றி அனைவரும் என்னை அழுக தொடங்க நானும் அழத் தொடங்கி விட்டேன். எனக்கு தோனியிடம் என்ன கூறுவது என்றும் தெரியாத நிலையில், அவர் என்னை ‘ பப்பு ‘ என அழைத்தார்.
அருகில் சென்றதும் நீ வந்ததும் என்னை வெளியே அனுப்பிவிட்டாய் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் தேம்பி அழ, தோனியோ காமெடிக்காக சொன்னேன் என தெரிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.