ஐபிஎல் போட்டியில் எண்ட்ரி கொடுக்கும் சின்ன தல சுரேஷ் ரெய்னா - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றின் அடையாளமாக திகழ்ந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விலை போகாத சின்ன தல சுரேஷ் ரெய்னா, வர்ணைனையாளராக செயல்பட உள்ளதை ஐபிஎல் நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் வர்ணனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி சேனலின் வர்ணனையார்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழில் வழக்கம் போல் ஆர்.ஜே பாலாஜி, முத்து, பத்ரிநாத், அபினவ் முகுந்த், பாவனா, ஸ்ரீகாந்த போன்றவர்கள் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.