ரெய்னா இல்லை - சிஎஸ்கேவில் இந்த 4 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!
எதிர்வரும் 2022 ஐபிஎல் ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஃப்ரான்சைஸ் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது, யாரை விடுவிக்க உள்ளது என்பது சஸ்பென்சாக உள்ளது.
இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், அது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2022 சீசனில் சென்னை அணி நிர்வாகம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி தான் சென்னை அணியின் முதல் சாய்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்னை அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
தோனி உடன் ருதுராஜ், டூப்ளசிஸ் மற்றும் ஜடேஜா எதிர்வரும் சீசனில் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
