சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கமா? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சி செய்கிறார்.
ரெய்னாவுக்குப் பதில் ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பளித்தார், இன்றைய போட்டியில் டிவைன் பிராவோவுக்குப் பதில் நியூசிலாந்து இடது கை வீரர் மிட்செல் சாண்ட்னர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெய்னாவின் ஐபிஎல் கதை இதோடு முடிகிறதா? அல்லது பிளே ஆஃப் சுற்றில் வாய்ப்பு பெறுகிறாரா என்பது தோனியின் கையில்தான் உள்ளது.
ஆனால் தோனி தன்னைத் தானே டிராப் செய்து கொண்டால் அவரது நோக்க் கடந்த யுஏஇ தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாத சிஎஸ்கே அணி இந்த முறை சொல்லி அடித்தது, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஆனாலும் தகுதி பெற்ற பிறகு செம சாத்து வாங்கி 2 தோல்விகளைப் பெற்று முதலிடத்தை டெல்லியிடம் இழந்தது.
பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது என்று கூற முடியாது, ஆனால் பிளே ஆஃபுக்கு தகுதி பெற பேரதிசயம் நிகழ வேண்டும்.
சென்னை அணி வருமாறு: ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ், மொயின் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி, மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா, தீபக் சாகர், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்.
பஞ்சாப் கிங்ஸ்: ராகுல், அகர்வால், மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷாரூக் கான், சர்பராஸ் கான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய்.