ரெய்னா இனி வேண்டவே வேண்டாம்..ரசிகர்கள் ஆவேசம்

MS Dhoni CSK IPL 2021 Suresh Raina
By Thahir Oct 03, 2021 07:59 AM GMT
Report

தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

ரெய்னா இனி வேண்டவே வேண்டாம்..ரசிகர்கள் ஆவேசம் | Suresh Raina Ms Dhoni Ipl2021 Csk

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும்,

அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், நேற்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டமும் இழக்காமல் 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 189 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் ஓவரில் இருந்தே சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

ஈவின் லீவிஸ் (27), ஜெய்ஸ்வால் (50), சஞ்சு சாம்சன் (28) மற்றும் சிவம் துபே (64* ) என அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்ததன் மூலம் 17.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் தோல்வியை கூட ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் வெறும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்த சுரேஷ் ரெய்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த வருடத்திற்கான தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா வெறும் 160 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அடுத்த போட்டியில் சுரேஷ் ரெய்னா பார்மிற்கு திரும்பிவிடுவார் என காத்திருந்த ரசிகர்கள் தற்போது பொறுமையை இழந்துள்ளனர்.

இனி வரும் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.