‘என்ன பேட்டிங் இது.. சின்ன பையன் மாதிரி’ - ரெய்னாவை வம்பிழுக்கும் முன்னாள் வீரர்கள்

sureshraina CSKvMI
By Petchi Avudaiappan Sep 21, 2021 02:00 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா மிக மோசமாக ஆடியதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் களமிறங்கிய ரெய்னா 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ராகுல் சாகரிடம் கேட்ச் ஆனார். போல்ட் வீசிய இந்தப் பந்தை அவர் அடித்த போது பேட் உடைந்தது.

இதனிடையே ரெய்னா பேட்டிங் குறித்து வர்ணனையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் டேல் ஸ்டெய்னிடம், ரெய்னாவை விட நீங்கள் நன்றாக ஆடுவீர்கள் போலும் என கிண்டலாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டெயின், அவுட்டான சமயத்தில் ரெய்னா ஸ்கூல் பாய் கிரிக்கெட் வீரர் போல் இருந்தார் என்றும், ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்படி ஆடுவாரா என்று நான் உண்மையில் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தர்மசங்கடமாக பேட் உடைந்து கேட்ச் ஆகி அவர் வெளியேறியது பரிதாபத்தை ஏற்படுத்துவதாகவும் ஸ்டெயின் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்த ஆட்டத்தில் அவர் தனது பார்மை நிரூபிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.