இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்: புகழ்ந்த சுரேஷ் ரெய்னா
தற்போதைய இந்திய அணியில் தன்னை கவர்ந்துள்ள இளம் வீரர்கள் யார் யார் என்பதை சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இந்திய அணி பெற்ற அனைத்து வெற்றியிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. இதனை பல நேரம் முன்னாள் வீரர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எதிர்கால இந்திய அணியும் வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தனக்கு பிடித்த இளம் வீரர்கள் யார் யார் என்பதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி முகமது சிராஜ் , தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய 4 பேரும் தான் தன்னை கவர்ந்ததாகவும், அதேசமயம் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் ப்ரியம் கர்க், கர்ன் சர்மா, அபிசேக் ஷர்மா மற்றும் சச்சின் பேபி ஆகியோரும் தன்னை பெரிதும் கவர்ந்துவிட்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.