கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் சின்ன தல : சோகத்தில் ரசிகர்கள்

Suresh Raina T20 World Cup 2022
By Irumporai Sep 06, 2022 05:24 AM GMT
Report

உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றார்.

தோனி ரெய்னா ஓய்வு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எஸ்.தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த இரட்டை ஓய்வு அறிவிப்பு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் சின்ன தல : சோகத்தில் ரசிகர்கள் | Suresh Raina Likelyt20 Leagues

இது தொடர்பாக அப்போது ரெய்னா கூறுகையில் : ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு பெற வேண்டும் என்று இருவருமே முன் கூட்டியே திட்டமிட்டோம்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் சின்ன தல : சோகத்தில் ரசிகர்கள் | Suresh Raina Likelyt20 Leagues

தோனியின் ஜெர்சி எண் 7, என்னுடைய ஜெர்சி எண் 3, சேர்த்தால் 73, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆடுகள் நிறைவு என்று எல்லாம் ஒன்று சேர்ந்த தினம் அன்று. எனவே இதை விட சிறந்த நாள் அமையாது என்று ஓய்வு பெற்று விட்டோம் என விளக்கமளித்தார்.

ரெய்னா ஓய்வு

இந்த நிலையில் ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் ரெய்னா உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு என தகவல் வெளியாகியுள்ளது, இந்த தகவல் ரெய்னா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெய்னா கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.   இது குறித்து ரெய்னா தனது ட்விட்டர் பதிவில் .

 கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன், மேலும்  நன்றி சொல்ல விரும்புகிறேன் BCCI , UPCACகிரிக்கெட் , சென்னைசூப்பர் கிங்  மற்ரும் சுக்லா ராஜீவ் அய்யா மற்றும் எனனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும்எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்