சி.எஸ்.கே.வை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்... - சுரேஷ் ரெய்னா உருக்கம்...!
சி.எஸ்.கே.வை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி -
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னையில் தோனி பயிற்சி
நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சமீபத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சென்னையில் பயிற்சி இறங்கிய தோனி தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சுரேஷ் ரெய்னா உருக்கம்
இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், தோனி, ஜடேஜாவுடன் இணைந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கமாக தெரிவித்துள்ளார்.