குத்துச்சண்டை வீரராக மாறிய ரெய்னா - வைரலாகும் வீடியோ

wwe sureshraina johncena
By Petchi Avudaiappan Aug 31, 2021 06:49 PM GMT
Report

முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா குத்துச்சண்டை வீரராக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இரண்டாம் பாதியின் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன.

இதற்காக தோனி தலைமையிலான சென்னை அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த அணி வீரரான சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் சக வீரர் கே.எம்.ஆசிப்புக்கு குத்துச்சண்டை வீரர் ஜான்சீனா போல ஸ்பியர் போட்டு அவரை தூக்கிப் போடுவதைப் போல அந்த வீடியோ அமைந்துள்ளது.