முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்
father
passed away
suresh raina
cancer battle
By Swetha Subash
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோயால் இன்று காலமானார்.
ராணுவ அதிகாரியான திரிலோக்சந்த், ஆயுதத் தொழிற்சாலையில் வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.
புற்றுநோயால் நீண்ட நாட்கள் போராடி வந்த நிலையில் இன்று காசியாபாத் இல்லத்தில் அவரின் உயிர் பிரிந்தது.
சுரேஷ் ரெய்னாவின் தந்தை மறைவிற்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சக வீரர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.