தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் ஆர்வம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சுரேஷ் ரெய்னா
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்துக்கான அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர் ஷிவம் டுபே, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ஆட்டம் ஆரம்பம்
சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை ஷிவம் டுபே வெளியிட்டார். இதுகுறித்து "தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு நான் பல கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.
ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். இனிமேல்தான் சின்ன தல ஆட்டம் ஆரம்பமாகிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆன நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழில் ஹீரோவாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.