ஒரே பந்தில் பேட்டையும் உடைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த சுரேஷ் ரெய்னா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டி துபாயில் நேற்று துவங்கியது.

முதல் பாதியில் 29 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 30 வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, சென்னை அணியின் முக்கிய வீரரான டூபிளசிஸ் முதல் ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய மொய்ன் அலியும் டக் அவுட்டானார். துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும், கேப்டன் தோனி 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதனால் ஆட்டத்தின் போது சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காணப்பட்டனர்.இந்நிலையில் சுரேஷ் ரைனா பேட்டிங் செய்த போது அவரின் பேட் உடைந்து அவுட் ஆனார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்