நம்ம ருதுராஜ் அப்படியே நம்ம தல தோனி மாதிரிதான் : சுரேஷ் ரெய்னா கருத்து

ருதுராஜ் தோனியின் குணாதிசயங்களை கொண்டவர் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.

ஆகவே ருத்துராஜ்க்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்துள்ளது  இந்த நிலையில் , ருதுராஜ் கெய்க்வாட்டினை சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 

இது பற்றி சுரேஷ்ரெய்னா கூறுகையில் நம் நாட்டுக்காக விளையாட தயாராகிவிட்டார்  ருதுராஜ். தற்போது உள்ள  நெருக்கடியான சூழலில் அவரது அபாரமான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தியதே அதற்கு உதாரணம் என கூறியுள்ளார்.

மேலும், ருதுராஜ் தோனியை போலவே குணாதிசயம் இருப்பதாகவும். தனது இலக்கை அடைவதில் குறிக்கோளாக இருந்து அதற்காக கடுமையாக உழைக்க கூடியவர் என ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

அதே போல் csk அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்தொடக்க வீரர்களாக களம் இறங்கிய  ருதுராஜ் மற்றும் டூ ப்ளசிஸை பல முன்னணிவீரர்களும்பாராட்டியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்