தோனி ஓய்வு குறித்து ரகசியம் உடைத்த ரெய்னா - முக்கியமான அப்டேட்!
தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அப்டேட் கொடுத்துள்ளார்.
தோனி ஓய்வு?
மே 6 ஆம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டிக்கு கமெண்ட்ரி செய்ய சுரேஷ் ரெய்னாவும் மைதானத்திற்கு வந்திருந்தார்.
அதற்கு பின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் ரெய்னா பங்கேற்றார். தொடர்ந்து, தோனியும் ரெய்னாவும் நீண்ட நேரம் மைதானத்தில் நின்றே உரையாடிக் கொண்டிருந்தனர்.
ரெய்னா தகவல்
இந்நிலையில், ரெய்னா ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என தோனி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். தனைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
முன்னதாக, லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என வர்ணனையாளரிடம் தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.