மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னாரா? மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Ajith Kumar Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 23, 2026 06:18 AM GMT
Report

மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

அஜித் சொன்னதாக பரவும் தகவல்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நடிகர் அஜித்குமார் காலையிலே வந்து, சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். 

மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னாரா? மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் | Suresh Chandra Denies Ajith Says No Need Change

அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தல தல என ஆர்ப்பரித்தனர். வாக்களித்து விட்டு அஜித்குமார் அங்கிருந்து செல்லும் போது, செய்தியாளர் "மாற்றம் தேவையா?" என கேட்ட கேள்விக்கு நடிகர் அஜித்குமார் "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவியது.

சுரேஷ் சந்திரா விளக்கம்

அஜித்குமார் சொன்னதாக வெளியான கருத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றதாகவும் சில தகவல்கள் பரவின. 

மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னாரா? மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் | Suresh Chandra Denies Ajith Says No Need Change

இந்நிலையில், அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் சொல்லவில்லை எனவும், செய்தியாளர் அஜித்திடம் மைக்கை நீட்டி மாற்றம் தேவையா என கேட்டதாகவும்,

பேட்டி தேவையில்லை, அதாவது பேட்டி அளிக்க முடியாது எனக்கூறியதை செய்தி நிறுவனம் அவ்வாறு வெளியிட்டுள்ளதாவும் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.