“யாருப்பா நீங்க எல்லாம்?” - பிக்பாஸ் வீட்டில் வனிதாவை வெளுத்து வாங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமாரை சக போட்டியாளர்கள் வெளுத்து வாங்கி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தற்போது திரை நட்சந்திரங்கள் vs பத்திரிக்கையாளர்கள் என்ற கான்செப்ட் டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கொண்டு இதில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற டாஸ்கில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அபிநய், சிநேகன், சுருதி, அனிதா சம்பத் ஆகியோர் திரை நட்சந்திரங்களாக உள்ளனர். அப்போது பத்திரிக்கையாளராக இருக்கும் வனிதா சுரேஷ் சக்கரவர்த்தியைப் பார்த்து நீங்க இங்கே என்ன பண்றீங்க என கேள்வி கேட்க அவர் கடுப்பாகி ஒரு ஸ்டாரை பார்த்து இப்படியொரு கேள்வி கேட்கலாமா? என பதிலளிக்கிறார்.
நீங்க ஸ்டாரே இல்லையே அதான் கேட்கிறேன் என வனிதா பதிலடி கொடுத்துள்ளார். நீங்க நேத்துக்கு பேசலையா பிரஸ்ஸை எதிர்த்து சினேகன் கேட்க, அனிதாவை வாயடைக்க வைத்த வனிதாவின் பேச்சை வைத்தே மடக்கிய சுரேஷ் சக்கரவர்த்தி அடக்கம் வேணும் என அதிரடியாக பொளந்து கட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வனிதாவுக்கு சரியான போட்டியாக சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளார் என பலரும் தெரிவித்துள்ளனர். suresh-chakaravarthy-slams-vanitha-vijayakumar-i