அப்பாவுக்காக ராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானை பழிவாங்குவேன் - வீரரின் மகள் சபதம்

Pakistan India Jammu And Kashmir
By Sumathi May 12, 2025 07:10 AM GMT
Report

அப்பாவுக்காக நான் ராணுவத்தில் சேர்ந்து பழிவாங்குவேன் என வீரரின் மகள் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் வீர மரணம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து வந்த நிலையில், இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன.

sergeant surendra moga daughter

இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் உதம்பூரில் உள்ள இந்தியா விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் அதை முறியடித்தது.

ஆனால் ட்ரோன் தாக்குதலின்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சுரேந்திர சிங் மோகா என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். சுரேந்திர சிங் மோகா, உதம்பூர் விமானப்படை தளத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்திய ரயில் பயணத்தால் நுரையீரல் தொற்று; மோசம் - அமெரிக்க சுற்றுலா பயணி வீடியோ

இந்திய ரயில் பயணத்தால் நுரையீரல் தொற்று; மோசம் - அமெரிக்க சுற்றுலா பயணி வீடியோ

மகள் உருக்கம்

அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவரது மகள் வர்திகா, "எனது தந்தை எதிரிகளைக் கொன்று நாட்டைப் பாதுகாக்கும் போது தியாகியாக இறந்தார் என்பதில் பெருமைப்படுகிறேன்.

பாகிஸ்தான் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும். எனது தந்தையைப் போலவே ஒரு ராணுவத்தில் சேர்ந்து அவரது மரணத்திற்குப் பழிவாங்குவேன்" எனத் தெரிவித்துள்ளார்.