சுராணா நிறுவனங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!
சென்னையில் உள்ள சுராணா நிறுவனத்திற்கு இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள சுராணா நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தங்கம் ஏற்றுமதி இறக்குமதி செய்தது தொடர்பாக சிபிஐயை சுமார் 103 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
இந்த தங்கமானது சமீபத்தில் திருடு போனது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டது விசாரணையில் வெளியானது.

இதனை தொடர்ந்து சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுராணா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள், தடவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கள்ளசாவி போட்டு தங்கம் திருடப்பட்டது எவ்வாறு என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக 72 சாவிகள் பயன்படுத்தப்படும் லாக்கரில் எவ்வாறு கள்ளச்சாவி போட்டு தங்கத்தை திருடி இருப்பார்கள் எனவும் ,அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 103கிலோ தங்கம் காணாமல் போன விவகாரத்தில் சுராணாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.