Friday, May 9, 2025

கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவு; இது மிகவும் தரக்குறைவான..காங் நிர்வாகி விளக்கம்!

BJP Kangana Ranaut X
By Swetha a year ago
Report

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டின் எக்ஸ் தளத்தில் கங்கனா குறித்து அவதூறு பதிவு வெளியானது அதிர்ச்சியளித்தது.

கங்கனா ரணாவத்

இந்த ஆண்டின் மக்களவை தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவு; இது மிகவும் தரக்குறைவான..காங் நிர்வாகி விளக்கம்! | Supriya Shrinate Removes Objectionable Posts

அந்த வகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் ப.ஜ.க சார்பில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில், அவருக்கு எதிரான அவதூறு கருத்து ஒன்றை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. இந்த விஷயம் இரு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங் நிர்வாகி விளக்கம்

இதனையடுத்து, மிகவும் சர்ச்சைக்குரிய அந்த பதிவை தனது இணையத்தள பக்கத்திலிருந்து சுப்ரியா நீக்கினார்.

கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவு; இது மிகவும் தரக்குறைவான..காங் நிர்வாகி விளக்கம்! | Supriya Shrinate Removes Objectionable Posts

இது குறித்து விளக்கம் அளித்த அவர், 'எனது சமூக வலைத்தள கணக்குகளை பலரும் பயன்படுத்துகின்றனர். அதில் யாரோ மர்ம நபர்தான் மிகவும் தரக்குறைவான இந்த பதிவை போட்டுள்ளார். அது குறித்து அறிந்தவுடனே அதை நான் நீக்கிவிட்டேன்' என்றார்.

மேலும், எந்த ஒரு பெண்ணுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்கமாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்த சுப்ரியா, இந்த பதிவை போட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.