இன்னைக்கு தேர்தல் வைத்தாலும் ஓபிஎஸ்க்கு தான் வெற்றி - நீதிமன்றத்தில் வாதம்
இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் ஓபிஎஸ்தான் வெற்றி பெறுவார் என உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று தொடங்கியது. அதில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பினர், “ அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆர் சில அடிப்படை விதிகளை மாற்றியமைக்க கூடாது என எண்ணினார்.
அதை அனைத்தையும் இபிஎஸ் தரப்பினர் அவசரகதியில் மாற்றிவிட்டனர். ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது என வாதிட்டனர். இன்று தேர்தல் நடைபெற்றாலும் ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார்” என தெரிவித்தார்.
இன்றுடன் ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்துள்ளன. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.