ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற Youtube பக்கம் - சர்ச்சை விளம்பம் ஒளிபரப்பு

Youtube Hackers Supreme Court of India
By Karthikraja Sep 20, 2024 07:22 AM GMT
Report

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்

யூடியூப் இந்திய உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் 2.17 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இந்த யூடியூப் பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்

supreme court youtube channel

இந்நிலையில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சி விளம்பரம்

மேலும் யூ டியூப் பக்கத்தின் பெயரை ரிப்பிள்(Ripple) என பெயர் மாற்றம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

supreme court youtube channel hacked ripple crypto currency content

Ripple என்பது அமெரிக்காவிலிருந்து இயங்கி வரும் கிரிப்டோ கரன்சி நிறுவனமாகும். உச்சநீதிமன்றத்தின் வீடியோக்கள் நீக்கப்பட்டு கிரிப்டோ கரன்சியான எக்ஸ்ஆர்பியை(XRP) விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் உச்ச அமைப்பான உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.