உச்சநீதிமன்றத்தில் மாநில மொழிகளில் தீர்ப்பு : வெளியான முக்கியத் தகவல் ?

M K Stalin Narendra Modi Supreme Court of India
By Irumporai Jan 23, 2023 07:09 AM GMT
Report

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடும் உத்தரவிற்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாநில மொழிகளில் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வழக்குகளும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில் அவற்றை மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு விழாவில் பேசினார்.

உச்சநீதிமன்றத்தில் மாநில மொழிகளில் தீர்ப்பு : வெளியான முக்கியத் தகவல் ? | Supreme Court Welcome By Prime Minister Mod

அந்த வீடியோவை  பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்சி தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.

பிரதமர் முதலமைச்சர் வரவேற்பு

அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று கூறியுள்ளார் 

இந்த முடிவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.