திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Supreme Court of India Tirupparankunram Murugan Temple
By Karthikraja Nov 20, 2026 08:50 AM GMT
Report

supreme court verdict on lighting thirupparankunram: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு தாக்​கல் செய்​யப்​பட்​டது. 

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு; உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Supreme Court Verdict On Lighting Thiruparankunram

இந்த வழக்கில் கடந்த இரு நாட்களாக, இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இந்தாண்டு ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றுவதற்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கோஷங்களை எழுப்புவது, கும்பல் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. தீபமேற்றும் குழுவை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் தீபம் ஏற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய உத்தரவு இடைக்கால உத்தரவு மட்டுமே, இது வழக்கின் விசாரணையை பாதிக்காது என தெரிவித்துள்ளது.