செந்தில் பாலாஜியின் கைது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து அவர் தற்போது நீதிமன்ற காவல் உள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
உச்சநீதிமன்றம் அதிரடி
கடந்த ஒன்றரை வாரமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், உச்ச நீதிமன்ற தற்போது பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி, கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது.

அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். இதனை மேற்கொள் காட்டி, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்று கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க Manithan
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan