செந்தில் பாலாஜி வழக்கு..! எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் - நீதிபதி நிஷா பானு
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என நீதிபதி நிஷா பானு கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில்நடைபெற்றது.
நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரிக்கிறது. செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டனர்.
செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில், அமலாக்கத்துறை விசாரணை குறித்து மட்டுமே முடிவெடுக்க வேண்டும்.
இன்று வேறு எந்த வாதங்களையும் முன்வைக்க போவதில்லை என தெரிவித்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என வேண்டும் என வாதிட்டனர்.
உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும்
இந்த நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி, வலக்கை முடித்து வைப்பதே சரியானது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதி நிஷா பானு கூறுகையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.