வரலாற்றில் முதல்முறை - உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இனி நேரலையில்...

India Supreme Court of India
By Sumathi Sep 27, 2022 10:22 AM GMT
Report

உச்சநீதிமன்ற வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

வழக்கு விசாரணை

உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றது.

வரலாற்றில் முதல்முறை - உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இனி நேரலையில்... | Supreme Court To Begin Live Streaming

இந்நிலையில், முதற்கட்டமாக சோதனை முறையில் 3 மாதங்களுக்கு தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்று முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 நேரலையில்.. 

அதன் அடிப்படையில், முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல்முறை - உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இனி நேரலையில்... | Supreme Court To Begin Live Streaming

மேலும், டெல்லி அரசு - மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரம், மகாரஷ்டிர அரசியல் தொடர்பான வழக்குகளும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.