கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் அனுமதி!
கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கருக்கலைப்பு
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை கடந்த 50 ஆண்டுகாலம் நீடித்து வந்த நிலையில், அதனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 13 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அல்லது தடை ஆகியவற்றில் முடிவு எடுப்பதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது எனக் கூறி தற்போதைக்கு உத்தரவை நிறுத்து வைத்தது.
அனுமதி நீட்டிப்பு
மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவலில், கருக்கலைப்பு தடை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்றும் கருக்கலைப்பு மருந்துகளை விநியோகம் செய்வதற்கும் வாங்குவதற்கும் உண்டான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.