பேரறிவாளன் வழக்கு குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
பேரறிவாளவன் விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க இயலாலத்துக்கான கூறிய கரத்திற்கான நகலை வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராஜீவ் காந்தி செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் தனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டரீதியாக போராட்டத்தை நடத்திவருகிறார். பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்திய விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க இயலாது என்று தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி விசாரணைக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க, நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் பேரறிவாளனின் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பிரதான மனுவுடன் இணைத்து ஆளுநர் கடித நகல் கோரிய அற்புதம்மாளின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.