மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது குற்றமா? மத்திய அரசு பதில் தர உத்தரவு

Sexual harassment Marriage Supreme Court of India
By Sumathi Sep 17, 2022 09:56 AM GMT
Report

மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருமண உறவு

மனைவியின் சம்மதமின்றி அவரை கட்டாயப்படுத்தி கணவன் உறவுகொள்வது என்பது திருமண பாலியல் வன்கொடுமையாகக் கருத வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதைக் குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும்.

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது குற்றமா? மத்திய அரசு பதில் தர உத்தரவு | Supreme Court Questions About Marital Rape

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் கணவருக்கு விலக்கு தரக்கூடிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டுமென்று , டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ஹரி ஷங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தேர் ஆகியோர்,

பாலியல் வன்கொடுமை

கடந்த மே 11-ம் தேதி இருவித தீர்ப்புகளை வழங்கினர். தனது தீர்ப்பில் நீதிபதி ராஜு ஷக்தேர் ``மனைவியின் சம்மதமின்றி கணவன் உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்; மாறாக, நீதிபதி ஹரி வழங்கிய தீர்ப்பில்,

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது குற்றமா? மத்திய அரசு பதில் தர உத்தரவு | Supreme Court Questions About Marital Rape

``இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின்படி அவ்வாறு குற்றமாகக் கருத முடியாது” என்றார். இருவேறு தீர்ப்புகள் வந்ததை அடுத்து, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகர்த்தனா, அஜய் ராஸ்தோகி அமர்வு இதை விசாரணைக்கு ஏற்றது. வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.