பெகாசஸ் விவகாரம் : சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

judgment SupremeCourt pegasusproject
By Irumporai Oct 27, 2021 05:50 AM GMT
Report

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், சிறப்பு  வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் உளவு ஒட்டுக்கேட்பு விவகாரம் இந்திய அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் ,இந்த விவகாரம்  குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை வசித்து வருகிறது.

அதன்படி :

இந்த வழக்கில் இன்று உத்தரவிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுகையில், "நாம் தகவல் தொழில்நுட்பக் காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் முக்கியமானவை. பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமையும் முக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிறப்பு வல்லுநர்கள் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த விசாரணையை உச்சநீதிமன்றடம் கண்காணிக்கும்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும்.

இணைய குற்றம் மற்றும் தடயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி குழுவில் இடம்பெற்றுள்ளார்.

சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரியும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.