ஜிஎஸ்டி விவகாரம் - சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

Supreme Court of India
By Nandhini May 19, 2022 07:23 AM GMT
Report

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது.

அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ``ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர... மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல'' என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

ஜிஎஸ்டி விவகாரம் - சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் | Supreme Court Of India Gst