பாலியல் தொழிலும் ஒரு தொழிலே... - இனி அவர்களை எந்த போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி

Supreme Court of India
By Nandhini May 26, 2022 11:48 AM GMT
Report

கரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழில் என்பதும் ஒரு தொழிலே.

சட்டத்தின்படி பாலியல் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் கண்ணியத்துடனும், சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டோரை காவல்துறை தொந்தரவு செய்யவோ, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

பாலியல் தொழிலும் ஒரு தொழிலே... - இனி அவர்களை எந்த போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி | Supreme Court Of India