உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் டி.ஒய்.சந்திரசூட்

Supreme Court of India
By Thahir Nov 09, 2022 04:49 AM GMT
Report

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்கிறார்.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் டி.ஒய்.சந்திரசூட் | Supreme Court New Judge

புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார். 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவ.10 இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.