இதுவே முதல்முறை.. நேரலையில் உச்ச நீதிமன்ற வழக்குகள் விசாரணை - ஏன்?
தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெரும் நிலையில், அவர் விசாரணை செய்யும் வழக்குகளை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றனர்.
என்.வி.ரமணா ஓய்வு
சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றுடன் அவருடைய பதவி காலம் முடிவடைகிறது. இன்றுடன் என்.வி.ரமணா ஓய்வு பெறவிருப்பதால்,

அவர் விசாரிக்கும் வழக்குகள் அனைத்தும் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் வழக்குகளை நேரலையில் விசாரனை செய்வது இதுவே முதல் முறையாகும்.
நேரலையில் விசாரணை
இந்த வழக்கு விசாரணைகளை https://webcast.gov.in/events/MTc5Mg-- என்ற இணையதளத்தில் காணலாம். சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யுயு லலித் இந்த விசாரணை அமர்வில் இடம் பெற்றுள்ளார்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இன்று பெகாசஸ் மற்றும் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிப்பது போன்ற முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. வரலாற்று நிகழ்வான இந்த நேரலை வழக்கு விசாரணையானது தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.