வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் - உச்சநீதிமன்றம் அதிரடி
வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கிய நிலையில்,
பொதுக்குழு பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், முடிவு எதுவும் எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், ரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வேட்பாளர் தேர்வு
ஆனால் சமாதானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு, சமாதானம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை என கூறுகிறீர்கள். நாங்கள் கூறும் பரிந்துரையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எடப்பாடி தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு தரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருத்தரை, பொதுக்குழுவின் சார்பாக, அவைத் தலைவர் கையெழுத்திட்டால் என்ன? என்று நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர். இவ்வாறு நடைபெற்ற காரசாரமான விவாதங்களின் முடிவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும்.
வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பலாம். பன்னீர் செல்வம், பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.