பாலியல் சித்ரவதை செய்தவரே பெண்ணை திருமணம் செய்து கொள்ள உச்சநீதிமன்றம் அதிர்ச்சி பரிந்துரை
மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய உறவினர் பெண்ணை ஆசிட் வீசுவேன் என மிரட்டி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருந்தார். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
அந்த ஜாமீன் உத்தரவை பம்பாய் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவரையே திருமணம் செய்து கொள்வாரா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றமே இது போன்ற கருத்தை தெரிவித்திருப்பது கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.