தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்..!

Government of Tamil Nadu
By Thahir Dec 14, 2022 09:23 AM GMT
Report

ஒரு லட்சம் அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

ஓய்வூதிய பலன்கள் தொடர்பான வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.

துப்புரவுதொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்..! | Supreme Court Imposed A Fine Of The Tn Govt

ஒரு லட்சம் அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.